/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் போக்குவரத்து நெரிசல் விபத்தை தவிர்க்க இரும்பு தடுப்பு வழங்கல்
/
திருத்தணியில் போக்குவரத்து நெரிசல் விபத்தை தவிர்க்க இரும்பு தடுப்பு வழங்கல்
திருத்தணியில் போக்குவரத்து நெரிசல் விபத்தை தவிர்க்க இரும்பு தடுப்பு வழங்கல்
திருத்தணியில் போக்குவரத்து நெரிசல் விபத்தை தவிர்க்க இரும்பு தடுப்பு வழங்கல்
ADDED : ஜூலை 31, 2025 01:06 AM

திருத்தணி:திருத்தணி நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு, தனியார் டயர் தொழிற்சாலை மூலம், 50 இரும்பு தடுப்புகள் திருத்தணி டி.எஸ்.பி.,யிடம் வழங்கப்பட்டன.
திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் பேருந்து, லாரி, கார், வேன், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்கள் மூலம் வந்து செல்கின்றனர்.
மேலும், திருப்பதியில் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, வேலுார், சித்துார் மற்றும் சென்னை போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் உள்பட அனைத்து வாகனங்களும் திருத்தணி நகரம் வழியாக செல்கின்றன.
இதனால், திருத்தணி நகரத்தில் சித்துார் சாலை, ம.பொ.சி.சாலை, அரக்கோணம் சாலை, அக்கைய்யநாயுடு சாலை, சன்னிதி தெரு போன்ற இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.
இதை தடுக்கும் வகையிலும், போக்குவரத்தை சீரமைக்க இரும்பு தடுப்புகள் தேவைப்பட்டன.
இதையடுத்து திருத்தணி போலீசார், திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் இயங்கி வரும், தனியார் டயர் தொழிற்சாலை நிர்வாகத்திடம் இரும்பு தடுப்புகள் வழங்குமாறு கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து டயர் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில், நேற்று காலை, 3.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 50 இரும்பு தடுப்புகளை பொது மேலாளர் ஜான்டேனியல், திருத்தணி டி.எஸ்.பி., அலுவலகத்தில், டி.எஸ்.பி., கந்தனிடம் ஒப்படைத்தார்.
நிகழ்ச்சியில் டயர் தொழிற்சாலை மக்கள் தொடர்பு அலுவலர் கஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.