/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விளம்பர பதாகையாக மாறிய பி.டி.ஓ., அலுவலக சுற்றுச்சுவர்
/
விளம்பர பதாகையாக மாறிய பி.டி.ஓ., அலுவலக சுற்றுச்சுவர்
விளம்பர பதாகையாக மாறிய பி.டி.ஓ., அலுவலக சுற்றுச்சுவர்
விளம்பர பதாகையாக மாறிய பி.டி.ஓ., அலுவலக சுற்றுச்சுவர்
ADDED : நவ 19, 2024 06:44 AM

திருவாலங்காடு; திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான கட்டடங்கள் மற்றும் சுற்றுச்சுவர்களில் விளம்பரங்களும் எழுதவும், போஸ்டர் ஒட்டவும் கூடாது என, விதிமுறை உள்ளது.
இதற்காக, அரசு துறை அலுவலக சுற்றுச்சுவர்களில், துறை ரீதியான விழிப்புணர்வு வாசகங்கள், திட்ட செயல்பாடுகள் எழுதும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடைமுறை காரணமாக தனியார் நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் சுற்றுச்சுவரில் விளம்பரங்கள் எழுதுவது தடுக்கப்பட்டது.
இந்நிலையில், டிசம்பரில் துணை முதல்வர் உதயநிதியின் பிறந்தநாள் வருவதால், ஆளுங்கட்சியினர் பிறந்தநாள் வாழ்த்து கூறி தங்கள் இஷ்டம் போல், அரசு கட்டடங்களில் விளம்பரம் எழுதும் நடைமுறையை மேற்கொண்டு உள்ளனர்.
அவ்வகையில், திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலக சுற்றுச்சுவர், அதனருகே உள்ள அங்கன்வாடி மைய சுவர் என, திருவாலங்காடின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு சுற்றுச்சுவர்களில் விளம்பரம் எழுதப்பட்டுள்ளது.
இது பல தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சி என்றால் அரசு சொத்துக்களை தங்கள் கட்சி சொத்து போல் எண்ணி விளம்பரம் எழுதலாமா என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இது, திருவாலங்காடு பகுதிவாசிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்திள்ளது.