/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மொபைல் டவரில் இருந்த ரேடியோ ரிமோட் யூனிட் திருட்டு
/
மொபைல் டவரில் இருந்த ரேடியோ ரிமோட் யூனிட் திருட்டு
மொபைல் டவரில் இருந்த ரேடியோ ரிமோட் யூனிட் திருட்டு
மொபைல் டவரில் இருந்த ரேடியோ ரிமோட் யூனிட் திருட்டு
ADDED : மார் 20, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டத்தில், 'ஏர்டெல்' தனியார் தொலைதொடர்பு டவர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்குள்ள, 'டவர்'களை தனியார் கண்காணிப்பு நிறுவனம் பராமரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம், தனியார் மொபைல்போன் டவர்களை கண்காணிக்கும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, திருவாலங்காடு ஒன்றியம் அரிச்சந்திராபுரம் கிராமத்தில் அமைந்துள்ள டவரில் உள்ள 'ரேடியோ ரிமோட் யூனிட்' திருடு போனது தெரிந்தது. இதன் மதிப்பு 1.25 லட்சம் ரூபாய். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரி கேசவன், திருவாலங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.