/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அத்திவாக்கம், கன்னிகைப்பேரில் பள்ளி வளாகத்தை சூழ்ந்த மழைநீர்
/
அத்திவாக்கம், கன்னிகைப்பேரில் பள்ளி வளாகத்தை சூழ்ந்த மழைநீர்
அத்திவாக்கம், கன்னிகைப்பேரில் பள்ளி வளாகத்தை சூழ்ந்த மழைநீர்
அத்திவாக்கம், கன்னிகைப்பேரில் பள்ளி வளாகத்தை சூழ்ந்த மழைநீர்
ADDED : டிச 06, 2025 06:30 AM

ஊத்துக்கோட்டை: அரசு பள்ளி வளாகங்களில் சூழ்ந்த மழைநீரால் நேற்றும் இரு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
எல்லாபுரம் ஒன்றியம், அத்திவாக்கம் உயர்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ளது. இங்கு அத்திவாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.
'டிட்வா' புயல் காரணமாக பெய்த மழையால், திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் சில தினங்களாக பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்தது.
நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால், சில பள்ளிகளின் வளாகம் முழுதும் மழைநீர் சூழ்ந்து கொண்டு இருந்தது. சில பள்ளிகளில் மழைநீரில் மாணவர்கள் நடந்து சென்றனர். சில பள்ளிகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
பெரியபாளையம் அடுத்த, அத்திவாக்கம் அரசு உயர்நிலை பள்ளி, கன்னிகைப்பேர் அரசு மேல்நிலை பள்ளியில் வளாகம் முழுதும் நீர் சூழ்ந்து காணப்பட்டதால், நேற்றும் இரு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.