/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இருளர் குடியிருப்பில் தேங்கிய மழைநீர் பேரண்டூரில் டெங்கு பரவும் அபாயம்

ADDED : பிப் 05, 2025 02:05 AM

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த, பேரண்டூர் கிராமத்தில், இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதியில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் முக்கிய தொழில் கூலி வேலைக்கு செல்வது.
இங்குள்ள மக்கள் வசிக்கும் இடத்தின் ஒரு பகுதியில் சாலை வசதி இன்றி கற்கள் நிறைந்ததாக உள்ளது. இதன் ஒரு பகுதி மக்கள் மழைநீரில் நடந்து செல்ல வேண்டி உள்ளது. குறிப்பாக, பள்ளிக்கு செல்லும் சிறுவர் - சிறுமியர் இந்த நீரை கடந்து தான் செல்கின்றனர்.
டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், பேரண்டூர் இருளர்கள் வசிக்கும் பகுதியில் தேங்கிய நல்ல நீரில் கொசுக்கள் உருவாகி, நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் முன். இப்பகுதியில் தேங்கிய நீரை அகற்ற வேண்டும் என. பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.