/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ராமாபுரம் சா லை படுமோசம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
ராமாபுரம் சா லை படுமோசம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
ராமாபுரம் சா லை படுமோசம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
ராமாபுரம் சா லை படுமோசம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : நவ 14, 2025 01:51 AM

பள்ளிப்பட்டு: பேருந்து வசதி இல்லாததால், இரண்டு ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பள்ளிப்பட்டு ஒன்றியம் ராமாபுரம், காக்களூர் ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லை. இதனால், இக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பொதட்டூர்பேட்டை, அத்திமாஞ்சேரிபேட்டை உள்ளிட்ட நகரங்களுக்கு நடந்தே செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.
இப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு விளையும் காய்கறிகளை, அத்திமாஞ்சேரிபேட்டை மற்றும் பொதட்டூர்பேட்டை வாரச்சந்தைகளில் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.
விளைபொருட்களை நகரங்களுக்கு கொண்டு செல்லவும், வாகன வசதி இல்லாததால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இப்பகுதி மக்கள் மருத்துவ வசதிக்காக, பொதட்டூர்பேட்டை, அத்திமாஞ்சேரிபேட்டைக்கு தான் வந்து செல்ல வேண்டும்.
இந்நிலையில், ராமாபுரம் - அத்திமாஞ்சேரிபேட்டை சாலை பராமரிப்பின்றி, குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், இந்த வழியாக நடந்து செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, இச்சாலையை சீரமைத்து, பொதட்டூர்பேட்டையில் இருந்து ராமாபுரம் வழியாக அத்திமாஞ்சேரிபேட்டைக்கு மினி பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

