/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முதியோர், மாற்றுத்திறனாளிக்கு வீடு தேடி வரும் ரேஷன் பொருள்
/
முதியோர், மாற்றுத்திறனாளிக்கு வீடு தேடி வரும் ரேஷன் பொருள்
முதியோர், மாற்றுத்திறனாளிக்கு வீடு தேடி வரும் ரேஷன் பொருள்
முதியோர், மாற்றுத்திறனாளிக்கு வீடு தேடி வரும் ரேஷன் பொருள்
ADDED : செப் 12, 2025 10:16 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இன்றும், நாளையும் ரேஷன் பொருள் வீடு தேடி வரும்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், 'முதல்வரின் தாயுமானவர்' திட்டத்தின் கீழ், இன்று மற்றும் நாளை 70 வயதிற்கு மேலுள்ள குடும்ப அட்டைதாரர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருள் விநியோகம் செய்யப்பட உள்ளது.
மேலும், இனிவரும் நாட்களிலும், மாதத்தின் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், மேற்படி திட்ட பயனாளிகளுக்கு, அவரவர் இல்லங்களுக்கே நேரில் வந்து குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.