/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின் இணைப்பு வழங்காததால் 6 மாதமாக ரேஷன் கடை வீண்
/
மின் இணைப்பு வழங்காததால் 6 மாதமாக ரேஷன் கடை வீண்
ADDED : ஜூலை 21, 2025 11:52 PM

கொண்டஞ்சேரி, கொண்டஞ்சேரியில் திறக்கப்பட்ட ரேஷன் கடையில் மின் இணைப்பு வழங்காததால், பயன்பாடில்லாமல் வீணாகி வருகிறது. இதனால், இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடத்தில் மக்கள் அச்சத்துடன் பொருட்கள் வாங்கி செல்கின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கொண்டஞ்சேரி ஊராட்சி. இங்குள்ள கிராம சேவை மையம் எதிரே உள்ள ரேஷன் கடையில், பகுதிமக்கள் பொருட்கள் வாங்கி செல்கின்றனர். இந்த கட்டடம் மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
கடந்த 2023 - 24ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 13 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது.
இக்கட்டடத்தை ஆறு மாதங்களுக்கு முன் திருவள்ளூர், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வி.ஜி.ராஜந்திரன் மற்றும் எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர். ஆனால், மின் இணைப்பு இல்லாததால், தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கிறது.
இது, பழுதடைந்த ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வருவோரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, ரேஷன் கடை கட்டடத்திற்கு மின் இணைப்பு வழங்கி, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, கொண்டஞ்சேரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.