/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கு மறுவாழ்வு
/
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கு மறுவாழ்வு
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கு மறுவாழ்வு
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கு மறுவாழ்வு
ADDED : ஆக 25, 2025 10:54 PM
திருவள்ளூர், திருவள்ளூர் அரசு மருத்து வக்கல்லுாரி மருத்துவமனையில், 985 கிராம் எடையில் பிறந்த குழந்தை, 53 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின் நலமுடன் மருத்துவர்கள் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது.
இங்கு, குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகள் தொடங்கி, குறைந்த எடை, தொற்று நோய், மஞ்சள் காமாலை பாதிப்பு உள்ளிட்ட குழந்தைகளுக்கு நவீன சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பிரிவில், பிறந்தது முதல் 28 நாட்கள் வரையிலான பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
இதற்காக தனி கட்டடத்தில், 24 மணி நேரமும் சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது.
இங்கு, செயற்கை சுவாச கருவி, மஞ்சள் காமாலைக்கான ஒளிக்கதிர் சிகிச்சை, ரத்த மாற்றம், நுரையீரல் விரிவடைவதற்கான 'சர்பேக்டன்ட்' உயர்தர எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கப்படுகிறது. 2024ல் மட்டும், 2,365 பச்சிளம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.
இதில், 985 குழந்தைகள் குறைந்த எடையில் பிறந்தவர்கள். அவற்றில், 20 குழந்தைகள் 1 கிலோ எடைக்கும் குறைவாக பி றந்தனர்.
அவர்களும், சிறந்த முறையில் சிகிச்சை பெற்று நலமுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தற்போது, திருப்பாச்சூரைச் சேர்ந்த சவுமியா என்பவருக்கு, 985 கிராமில் குழந்தை பிறந்தது.
இக்குழந்தைக்கு, 53 நாட்கள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது நலமுடன் அவரது தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.