/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையில் சிக்னல்கள் பழுது
/
நெடுஞ்சாலையில் சிக்னல்கள் பழுது
ADDED : மே 12, 2025 12:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து சோளிங்கர் வழியாக ராணிப்பேட்டை, வேலுார், ஆந்திர மாநிலம் சித்துாருக்கு, தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
இந்த மார்க்கத்தில் வெள்ளாத்துார் ஓடை, பில்லாஞ்சி பேருந்து நிறுத்தம், பில்லாஞ்சி குளக்கரை உள்ளிட்ட பகுதியில்சிக்னல்கள் பொருத்தப்பட்டன. இந்த சிக்னல்களை பராமரிக்காததால், தற்போது செயலிழந்து கிடக்கின்றன. சிக்னல்களை அமைப்பதற்காக சாலையோரம் நடப்பட்ட கம்பங்கள் வரை, தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
எனவே, சிக்னல்களை செயல்படுத்தவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.