/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி -- திருவள்ளூர் இடையே கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
/
கும்மிடி -- திருவள்ளூர் இடையே கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
கும்மிடி -- திருவள்ளூர் இடையே கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
கும்மிடி -- திருவள்ளூர் இடையே கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
ADDED : நவ 27, 2024 09:55 PM
கும்மிடிப்பூண்டி:தொழில் நகரமான கும்மிடிப்பூண்டி பகுதியில் இருந்து அலுவல்கள் மற்றும் கோரிக்கை தொடர்பாக தினசரி நுாற்றுக்கணக்கான மக்கள் மாவட்ட தலைநகரான திருவள்ளூர், சென்று வருகின்றனர்.
சாலை மார்க்கமாக மட்டுமே திருவள்ளூர் செல்ல முடியும் என்பதால், பெரும்பாலானோர், பஸ்களை நம்பி உள்ளனர்.
கும்மிடிப்பூண்டியில் இருந்து, காலை 7:30 மணி, 11:30 மணி, மாலை 3:30 மணி, இரவு 8:00 மணி என நான்கு முறை அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சேவை போதுமானதாக இல்லை. கும்மிடிப்பூண்டி மக்களின் தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படாததால், கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக அரசு பஸ்கள் இயக்கப்பட வேண்டும். அதன் வாயிலாக, திருவள்ளூர் மட்டுமின்றி, சிறுவாபுரி, ஆரணி, பெரியபாளையம், வெங்கல் செல்லும் பயணியரும் பயனடைவர் என பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.