/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சீரான மின் விநியோகம் வழங்க கோரிக்கை
/
சீரான மின் விநியோகம் வழங்க கோரிக்கை
ADDED : ஆக 10, 2025 10:24 PM
திருத்தணி:சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என, கிருஷ்ணசமுத்திரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்தணி அடுத்த கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர்.
இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக, கிருஷ்ணசமுத்திரம் பகுதியில் சீரான மின்சாரம் வழங்குவதில்லை. லேசான மழை பெய்தாலும், காற்று அடித்தாலும் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
பின், நான்கு முதல் ஏழு மணி நேரம் வரை, சில நேரங்களில் மின் வினியோகம் செய்யப்படுவதில்லை.
இதனால், கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக, விவசாய கிணறுகளுக்கு குறைந்த அழுத்த மின்சாரம் விநியோகம் செய்வதால், மின் மோட்டார்களை இயக்க முடியாமல், பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று கிருஷ்ணசமுத்திரம் கிராம மக்கள், திருத்தணி மின் வாரிய அதிகாரிகளிடம் நேரில் வந்து, சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.