/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கனமழைக்கு சேதமான சாலை விரைந்து சீரமைக்க கோரிக்கை
/
கனமழைக்கு சேதமான சாலை விரைந்து சீரமைக்க கோரிக்கை
ADDED : அக் 22, 2025 10:40 PM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பகுதியில் பெய்து வரும் கனமழையால், தேசிய நெடுஞ்சாலையின் பல இடங்கள் சேதமடைந்துள்ளன.
கும்மிடிப்பூண்டியில் ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால், தேசிய நெடுஞ்சாலையின் பல பகுதிகள் சேதமடைந்துள்ளன.
குறிப்பாக, கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் சந்திப்பு மற்றும் ரயில் நிலைய சந்திப்பு பகுதியில் உள்ள மேம்பாலங்களில் உள்ள சாலையில் ஏராளமான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
இரவு நேரத்தில் இருளில் முழ்கும் இந்த இரு மேம்பாலங்கள் வழியாக செல்லும் வாகனங்கள், திக்கு முக்காடி போகின்றன.
அடுத்தடுத்து மழைக்காலம் என்பதால், உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு, பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

