/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பீரகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவுநேர மருத்துவர் நியமிக்க கோரிக்கை
/
பீரகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவுநேர மருத்துவர் நியமிக்க கோரிக்கை
பீரகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவுநேர மருத்துவர் நியமிக்க கோரிக்கை
பீரகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவுநேர மருத்துவர் நியமிக்க கோரிக்கை
ADDED : ஏப் 21, 2025 11:40 PM
திருத்தணி, திருத்தணி அடுத்த பீரகுப்பத்தில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பீரகுப்பம், டி.சி.கண்டிகை, வி.கே.என்.கண்டிகை, வி.கே.ஆர்.புரம், எஸ்.அக்ரஹாரம் உள்ளிட்ட ஊராட்சிகளில், தினமும் 300க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இதுதவிர, கர்ப்பிணியருக்கு சிகிச்சை, பரிசோதனை மற்றும் பிரசவம் பார்க்கப்படுகிறது. மேலும், கர்ப்பிணியர் உள்நோயாளிகளாக தங்கியிருந்து பிரசவ சிகிச்சை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், ஆரம்ப சுகாதார நிலையத்தில், பகல் நேரத்தில் மட்டுமே மருத்துவர் ஒருவர் பணிபுரிகிறார். மாலை 6:00 - மறுநாள் காலை 7:30 மணி வரை, ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இருப்பதில்லை. மாறாக, ஒருவர் அல்லது இரு செவிலியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.
இரவு நேரத்தில் மேற்கண்ட கிராமங்களில் இருந்து அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை, 'மருத்துவர் இல்லை. திருத்தணி அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள்' என அனுப்புகின்றனர். இதனால், நோயாளிகளுக்கு குறித்த நேரத்தில் முதலுதவி அளிக்காததால் கடும் சிரமப்படுகின்றனர்.
எனவே, கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, பீரகுப்பம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர மருத்துவரை நியமிக்க வேண்டும் என, ஊராட்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.