/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பயன்பாட்டிற்கு வராத அங்கன்வாடி இடித்து அகற்ற கோரிக்கை
/
பயன்பாட்டிற்கு வராத அங்கன்வாடி இடித்து அகற்ற கோரிக்கை
பயன்பாட்டிற்கு வராத அங்கன்வாடி இடித்து அகற்ற கோரிக்கை
பயன்பாட்டிற்கு வராத அங்கன்வாடி இடித்து அகற்ற கோரிக்கை
ADDED : ஜன 05, 2025 10:53 PM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஊராட்சியில், பவானி நகர், பராசக்தி நகரில் உள்ள குழந்தைகள் பயில, வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், 8 ஆண்டுகளுக்கு முன், 7 லட்சம் ரூபாய் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டது.
இந்த கட்டடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள், கட்டடம் உறுதி தன்மையுடன் இல்லை என, சான்றளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாற்று கட்டடம் அதனருகே கட்டி தற்போது பயன்பாட்டில் உள்ளது.
பயன்பாட்டிற்கு வராமல் விடப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்தை சுற்றி, மூன்று ஆண்டுகளாக செடிகள் வளர்ந்துள்ளன.
எனவே, பயன்பாடின்றி பாழடைந்துள்ள கட்டடத்தை இடித்து அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.