/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நீதிமன்றத்தில் வழக்குகள் தேக்கம் பிரித்து செயல்படுத்த கோரிக்கை
/
நீதிமன்றத்தில் வழக்குகள் தேக்கம் பிரித்து செயல்படுத்த கோரிக்கை
நீதிமன்றத்தில் வழக்குகள் தேக்கம் பிரித்து செயல்படுத்த கோரிக்கை
நீதிமன்றத்தில் வழக்குகள் தேக்கம் பிரித்து செயல்படுத்த கோரிக்கை
ADDED : ஜன 17, 2025 10:04 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி - ரெட்டம்பேடு சாலையில் உள்ள வாடகை கட்டடத்தில், 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஒருங்கிணைந்த மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் துவக்கப்பட்டது.
தற்போது, அந்த நீதிமன்றத்தில், 1,700 உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக, வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
அதிகளவில் வழக்குகள் தேக்கம் அடைந்திருப்பதால், தற்போது ஒன்றாக இயங்கும் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை இரண்டாக பிரித்து, தனித்தனியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், பொன்னேரியில் முதன்மை சார்பு நீதிமன்றம் மற்றும் கூடுதல் சார்பு நீதிமன்றம் என, இரு சார்பு நீதிமன்றங்கள் இயக்கி வருகின்றன. இதனால், கும்மிடிப்பூண்டி வட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள், வழக்காடிகள் மற்றும் அரசு அதிகாரிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, கும்மிடிப்பூண்டியில் சார்பு நீதிமன்றம் திறக்க வேண்டும் என, வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் மற்றும் தலைமை நீதிபதிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.