/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழையால் குளமான தெருக்கள் சாலை வசதி ஏற்படுத்த கோரிக்கை
/
மழையால் குளமான தெருக்கள் சாலை வசதி ஏற்படுத்த கோரிக்கை
மழையால் குளமான தெருக்கள் சாலை வசதி ஏற்படுத்த கோரிக்கை
மழையால் குளமான தெருக்கள் சாலை வசதி ஏற்படுத்த கோரிக்கை
ADDED : ஜூலை 25, 2025 01:34 AM

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், சிறு மழைக்கே குளமான தெருக்களில் சாலை வசதி ஏற்படுத்த வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை பேரூராட்சி, பஜார் பகுதியில் உள்ளது கண்ணதாசன் நகர். வளர்ந்து வரும் இப்பகுதியில் சாலை, கால்வாய் வசதி ஏதுமின்றி இருந்தது. சாலை, கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தர வேண்டும் என, இப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இதை தொடர்ந்து இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய், சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.
இப்பகுதியில் மூன்று குறுக்கு தெருக்களில் முறையான சாலை வசதி இல்லாததால், மழைக்காலங்களில் சிறு மழை பெய்தாலும், குளம் போல் மழைநீர் தேங்கி விடுகிறது.
எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கண்ணதாசன் நகர் பகுதியில் உள்ள குறுக்குத் தெருக்களில் சாலை வசதி செய்து தர வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.