/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரி - தச்சூர் நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் பொருத்த கோரிக்கை
/
பொன்னேரி - தச்சூர் நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் பொருத்த கோரிக்கை
பொன்னேரி - தச்சூர் நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் பொருத்த கோரிக்கை
பொன்னேரி - தச்சூர் நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் பொருத்த கோரிக்கை
ADDED : மே 15, 2025 09:32 PM
பொன்னேரி:பொன்னேரி - தச்சூர் மாநில நெடுஞ்சாலையைில் கிருஷ்ணாபுரம், சைனாவரம், மாதவரம், ஆண்டார்குப்பம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
இந்த சாலையில் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் சாலை இருண்டு கிடக்கிறது. பல்வேறு தேவைகளுக்கு மேற்கண்ட பகுதிகளில் இருந்து பொன்னேரி வந்து செல்லும் மக்கள் மின்விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
சாலையின் பல்வேறு பகுதிகளில் மாடுகள் உலா வருகின்றன. இவை இரவு நேரங்களில் சாலையோரங்களில் படுத்துறங்குகின்றன. இருட்டில் இவை இருப்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியாமல், வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர்.
அதிகாலையில் கோயம்பேடு சந்தைக்கு செல்லும் வியாபாரிகள் இந்த சாலையில் பயணிப்பதற்கு அச்சப்படுகின்றனர்.
பொன்னேரி - தச்சூர் இடையேயான சாலை இருவழியாக சாலையாக, மைய தடுப்புகளுடன் அமைந்திருப்பதால், அவற்றில் கம்பங்கள் பதித்து, மின்விளக்குளை பொருத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.