/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி குடியிருப்பு வழியாக செல்லும் உபரிநீர் கால்வாயை துார்வார கோரிக்கை
/
கும்மிடி குடியிருப்பு வழியாக செல்லும் உபரிநீர் கால்வாயை துார்வார கோரிக்கை
கும்மிடி குடியிருப்பு வழியாக செல்லும் உபரிநீர் கால்வாயை துார்வார கோரிக்கை
கும்மிடி குடியிருப்பு வழியாக செல்லும் உபரிநீர் கால்வாயை துார்வார கோரிக்கை
ADDED : ஆக 11, 2025 12:41 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு இடையே கடந்து செல்லும் உபரி நீர் கால்வாயை, பருவ மழைக்கு முன் துார்வாரி பராமரிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி ஈசா பெரிய ஏரி, பாலகிருஷ்ணாபுரம் ஏரி ஆகியவற்றின் உபரி நீர் கால்வாய், கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையம், தபால் தெரு, பாரதிதாசன் சாலை, மேட்டு தெரு ஆகிய குடியிருப்பு பகுதிகள் வழியாக, சோழியம்பாக்கம் ஏரியை சென்றடைகிறது.
அந்த கால்வாய், 40 முதல் 70 அடி வரை அகலம் கொண்டதாகும். பொது பணித்துறையின் நீர்வளத்துறை பராமரிப்பில், அந்த கால்வாய் உள்ளது.
ஒவ்வொரு தொடர் மழைக்காலங்களிலும், கால்வாயை ஒட்டியுள்ள மேற்கண்ட பகுதிகள் முழுதும் வெள்ளம் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்குவது வழக்கம்.
இதற்கு முக்கிய காரணம், கால்வாய் ஆக்கிரமிப்புகளும், முறையான பராமரிப்பு இல்லாததும் தான் என, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தடையின்றி கால்வாயில் உபரி நீர் சென்றால், வெள்ள அபாயத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி மக்கள் தப்பிக்க முடியும். தற்போது, அந்த கால்வாயை மறைக்கும் அளவிற்கு, ஆகாய தாமரை, செடி, கொடிகள் சூழ்ந்து காணப்படுகின்றன.
அவற்றை துார்வாரி, கால்வாயை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாயை ஆழப்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.