/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புழல் ஏரியில் இருந்து குழாய் வழியாக மீஞ்சூருக்கு குடிநீர் வழங்க கோரிக்கை
/
புழல் ஏரியில் இருந்து குழாய் வழியாக மீஞ்சூருக்கு குடிநீர் வழங்க கோரிக்கை
புழல் ஏரியில் இருந்து குழாய் வழியாக மீஞ்சூருக்கு குடிநீர் வழங்க கோரிக்கை
புழல் ஏரியில் இருந்து குழாய் வழியாக மீஞ்சூருக்கு குடிநீர் வழங்க கோரிக்கை
ADDED : ஜூன் 19, 2025 06:51 PM
மீஞ்சூர்:மீஞ்சூர் பேரூராட்சி பகுதிக்கு, புழல் ஏரியில் இருந்து குடிநீர் கொண்டு வந்து விநியோகம் செய்ய வேண்டும் என, சட்டசபை பொதுகணக்கு குழுவினரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு, 5 - 8 கி.மீ., தொலைவில் உள்ள சீமாவரம் மற்றும் வன்னிப்பாக்கம் பகுதிகளில் கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தினமும், 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.
இது போதுமானதாக இல்லாமல், குடியிருப்புவாசிகள் கேன்களில் தண்ணீரை அடைத்து விற்பனை செய்யப்படுவதையும், லாரி, டிராக்டர்களில் கொண்டு வருவதையும் வாங்கி பயன்படுத்தும் நிலையில் உள்ளனர்.
மீஞ்சூர் நகரத்தில் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதால், புழல் ஏரியில் இருந்து கொண்டு வந்து விநியோகம் செய்ய வேண்டும் என, குடியிருப்புவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சட்டசபை பொதுக்கணக்கு குழுவினர் நேற்று முன்தினம் மீஞ்சூர் பகுதியில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களிடம் மீஞ்சூர் பேரூராட்சி கவுன்சிலர் அபுபக்கர், இது குறித்து மனு அளித்தார்.
மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையை ஒட்டி, புழல் ஏரியில் இருந்து பைப்லைன் வாயிலாக குடிநீர் வருவதற்கு சாத்தியகூறுகள் இருப்பதாகவும், சரியான திட்டமிடல் வாயிலாக செயல்படுத்த முடியும் எனவும், பொதுக்கணக்கு குழுவினரிடம் எடுத்துரைக்கப்பட்டது. அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக குழுவினர் தெரிவித்தனர்.