/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளி எதிரே நிழற்குடை அமைக்க கோரிக்கை
/
பள்ளி எதிரே நிழற்குடை அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 28, 2025 11:24 PM

பள்ளிப்பட்டு, அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே பயன்பாடின்றி விடப்பட்டுள்ள கால்நடை மருந்தக வளாகத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர்.கே.பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு செல்லும் மாநில நெடுஞ்சாலையில், அத்திமாஞ்சேரிபேட்டையில் அரசு மேல்நிலை மற்றும் மகளிர் உயர்நிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த பள்ளிகளில், 1,500க்கும் மேற்பட்ட மாணவ --- மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி நுழைவாயில் எதிரே பாழடைந்த நிழற்குடை, கைவிடப்பட்ட கால்நடை மருந்தக கட்டடம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
இந்த கட்டடங்கள் பயன்பாடின்றி செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. பேருந்து மூலம் பள்ளிக்கு வரும் மாணவர்கள், காத்திருக்க போதிய இடவசதியின்றி சாலையோரம் நிற்கும் நிலை உள்ளது. இந்த கட்டடங்களை இடித்து அகற்றி விட்டு, நிழற்குடை அமைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.