/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுற்றி திரியும் லங்கூர் குரங்கு வனத்துறை பிடிக்க கோரிக்கை
/
சுற்றி திரியும் லங்கூர் குரங்கு வனத்துறை பிடிக்க கோரிக்கை
சுற்றி திரியும் லங்கூர் குரங்கு வனத்துறை பிடிக்க கோரிக்கை
சுற்றி திரியும் லங்கூர் குரங்கு வனத்துறை பிடிக்க கோரிக்கை
ADDED : செப் 10, 2025 09:51 PM

கும்மிடிப்பூண்டி:மாதர்பாக்கம் பகுதியில் சுற்றித்திரியும் சாம்பல் நிற லங்கூர் குரங்கை, வனத்துறையினர் பத்திரமாக பிடித்து காட்டில் விட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடக்கே இமயமலை அடிவாரம் துவங்கி, தெற்கே மேற்கு தொடர்ச்சி மலை வரை சாம்பல் நிற லங்கூர் குரங்கு காணப்படுகிறது. மக்கள் வசிக்கும் பகுதியை ஒட்டிய காடுகளில் அவை அதிக அளவில் காணப்படும். இவை பெரும்பாலும் கூட்டமாக வாழும்.
கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் பகுதியில், சாம்பல் நிற லங்கூர் குரங்கு ஒன்று, மூன்று நாட்களுக்கு முன் வழிதவறி வந்தது. மாதர்பாக்கம் பகுதியை ஒட்டிய ஆந்திர வனப்பகுதியில் இருந்து வந்திருக்கக் கூடும் என கூறப்படுகிறது.
வழிதவறி வந்த குரங்கு, மாதர்பாக்கம் பஜார் பகுதியில் உள்ள காய்கறி மற்றும் பழக்கடைகள் உள்ள பகுதியில் சுற்றி வருகிறது. இந்த குரங்கு பார்ப்பதற்கு புதிதாக இருப்பதால், வியாபாரிகளும், பொதுமக்களும் அருகே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, இந்த குரங்கை வனத்துறையினர் பத்திரமாக பிடித்து, வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.