/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெல் மகசூல் பாதிப்பை தவிர்க்க ஆய்வு விஞ்ஞாணி டேனியல் செல்லப்பா உறுதி
/
நெல் மகசூல் பாதிப்பை தவிர்க்க ஆய்வு விஞ்ஞாணி டேனியல் செல்லப்பா உறுதி
நெல் மகசூல் பாதிப்பை தவிர்க்க ஆய்வு விஞ்ஞாணி டேனியல் செல்லப்பா உறுதி
நெல் மகசூல் பாதிப்பை தவிர்க்க ஆய்வு விஞ்ஞாணி டேனியல் செல்லப்பா உறுதி
ADDED : ஜன 30, 2025 02:15 AM

பொன்னேரி:பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.
வடகிழக்கு பருவமழை காலங்களில், மழை, வெள்ளத்தால், விவசாயம் பாதித்து விவசாயிகள் வருவாய் இழக்கின்றனர்.
இது தொடர்பாக, திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் உதவி இயக்குநராக பணிபுரியும், இந்திய அணு விஞ்ஞானி டேனியல் செல்லப்பா சிறப்பு அழைப்பாளராக ஆய்வில் பங்கேற்றார்.
பொன்னேரி அடுத்த மெதுார் கிராமத்தில் நெல் அறுவடை பணிகளை பார்வையிட்டு, விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவது தொடர்பாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இப்பகுதியில் விவசாயிகள் அவர்களின் விவசாய முறை, தேவைகள், மகசூல் பாதிப்புகள் குறித்து தெரிவித்தனர்.
இது தொடர்பாக விவசாய நிலங்களின் மண் மற்றும் தண்ணீர் பரிசோதனை அறிக்கை, மழை பெய்யும்போது மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அருகில் உள்ள நீர்நிலைகள், மகசூல் அளவு குறித்து வேளாண்மை அதிகாரிகளிடம் விவரம் கேட்டு உள்ளோம்.
இதை மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மைய ஆய்விற்கு உட்படுத்தி, இப்பகுதி விவசாயிகளுக்கு எவ்வாறு உதவுவது என ஆய்வு கொள்ளப்படும்
காலநிலை மாற்றத்தால் விவசாயம் பாதிப்பு நாடு முழுதும் உள்ளது. இது குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளில் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப எவ்வாறு விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
****

