/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறு மழைக்கே மின்சாரம் 'கட்' திருவாலங்காடு வாசிகள் அவதி
/
சிறு மழைக்கே மின்சாரம் 'கட்' திருவாலங்காடு வாசிகள் அவதி
சிறு மழைக்கே மின்சாரம் 'கட்' திருவாலங்காடு வாசிகள் அவதி
சிறு மழைக்கே மின்சாரம் 'கட்' திருவாலங்காடு வாசிகள் அவதி
ADDED : மே 31, 2025 02:30 AM
திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னம்மாபேட்டை, மணவூர், பழையனூர், திருவாலங்காடு உட்பட 25க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, கடம்பத்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது.
தற்போது கோடை மழை பெய்து வரும் நிலையில், சிறிய அளவு காற்று வீசினாலே மணிக்கணக்கில் மின்சாரம் துண்டிப்பது வழக்கமாகி உள்ளது. கடந்த 28ம் தேதி மழை மற்றும் காற்று அடித்ததால், திருவாலங்காடு பகுதியில் எட்டு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
நேற்று, 20 நிமிட மழைக்கே, சின்னம்மாபேட்டை, தொழுதாவூர், மணவூர் பகுதிகளில் இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சில மாதங்களில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், மக்களின் மின் தேவையை வாரியம் எப்படி சமாளிக்கும் என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே, கலெக்டர் பிரதாப், மின்வாரிய துறையினருடன் கூட்டம் நடத்தி, தடையில்லா மின்சாரம் வழங்கவும், கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்து, மின்தடை ஏற்படும் பகுதிகளில் நிவர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.