/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
10 ஆண்டிற்கு முன் கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு வழங்க தீர்மானங்கள் நிறைவேற்றல்

ADDED : ஜன 08, 2025 07:57 PM
திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழித்தடம் விரிவாக்கம் செய்வதற்கு, 10 ஆண்டுகளுக்கு முன், தேசிய நெடுஞ்சாலைத் துறை, 50 கிராமங்களைச் சேர்ந்த, 600 விவசாயிகளுடைய நிலங்கள் குடியிருப்புகளை கையகப்படுத்தி சாலை வசதியை ஏற்படுத்தியது.
கையகப்படுத்திய நிலத்திற்கு உரிய இழப்பீடு தராமல் காலம் தாழ்த்துவதாக கூறி, நிலம் வழங்கிய 140 விவசாயிகள், கடந்த டிச.,23ம் தேதி, திருவள்ளூர் அடுத்த பட்டரைப்பெரும்புதூர் டோல்கேட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது, திருவள்ளூர் கலெக்டர், பாதிக்கப்பட்டவர்களை அழைத்து விசாரித்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, கூறியுள்ளார்.
அதற்கான முன்னெடுப்புகள் தாமதமானதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில், திருவாலங்காடு ஒன்றியம், கனகம்மாசத்திரத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.
இதில், நிலம் வழங்கியவர்களை கலெக்டர் விரைந்து விசாரித்து இழப்பீடு தொகை உயர்த்தி வழங்க வேண்டும், புதிதாக நிலம் கையகப்படுத்தும்போது தற்போதைய சந்தை மதிப்பின் படி இழப்பீடு வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட நிர்வாகிகள் பாலாஜி, பெருமாள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.