/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வெங்கத்துார் ஏரி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி 3 ஆண்டுகளாகியும் வருவாய்த் துறை அதிகாரிகள் அலட்சியம்
/
வெங்கத்துார் ஏரி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி 3 ஆண்டுகளாகியும் வருவாய்த் துறை அதிகாரிகள் அலட்சியம்
வெங்கத்துார் ஏரி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி 3 ஆண்டுகளாகியும் வருவாய்த் துறை அதிகாரிகள் அலட்சியம்
வெங்கத்துார் ஏரி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி 3 ஆண்டுகளாகியும் வருவாய்த் துறை அதிகாரிகள் அலட்சியம்
ADDED : மே 08, 2025 02:23 AM
கடம்பத்துார்:கடம்பத்துாார் ஒன்றியத்தில், வெங்கத்துார் ஏரி ஆக்கிரமிப்பாளர்களுக்கு வருவாய்த் துறையினர் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி, மூன்று ஆண்டுகளாகியும் எவவித நடவடிக்கையும் எடுக்காதது விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சியில், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது வெங்கத்துார் ஏரி. இந்த ஏரியில் ஐந்து மதகுகள், ஒரு கலங்கல் என, 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை நம்பி, 500 ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த ஏரிக்கு அதிகத்துார் ஏரி உபரிநீர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் மழைநீரால் நிரம்பும் இந்த ஏரியில் வெளியேறும் உபரி நீர் கூவம் ஆற்றிற்கு சென்று செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்கிறது.
இந்த ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் பல இடங்களில் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளதால் நீர் சேகரமாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், ஏரியில் நீர் பிடிப்பு பகுதியிலும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி, 150 ஏக்கர் பரப்புளவு பகுதிகளில் குடியிருப்புகளாகவும் விவசாய நிலங்களாகவும் மாறியுள்ளது.
இதுகுறித்து, இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் குடியிருப்பு நலச்சங்கங்கள் தமிழக முதல்வர் முதல், அனைத்து அதிகாரிகளுக்கும் மனு அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து, பொதுப்பணித்துறையினர், மேற்படி ஏரியில் நீர்பரப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவைகளை அகற்றவும், எல்லை கற்களை நடவும் வட்டாட்சியர், திருவள்ளூர் அவர்களுக்கு நிலஅளவை செய்ய வேண்டி கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதையடுத்து, 2022ம் ஆண்டு, மே மாதம், வெங்கத்துார் ஏரி ஆக்கிரமிப்பாளர்களுக்கு வருவாய்த் துறையினர் படிவம் - 7ன் கீழ், அரசு உத்தரவில்லாமல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே, ஆக்கிரமிப்பாளர்களாகிய நீங்கள் இக்கடிதம் கிடைத்த ஒரு வார காலத்திற்கு, கலெக்டர் / வட்டாட்சியர் அவர்களை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஆனால் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி மூன்று ஆண்டுகளாகியும் இன்று வரை அதிகாரிகள் எவ்வித நடவடிககையும் எடுக்காதது விவசாயிகள் மற்றும் குடியிருப்பு நலசங்கத்தினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம், வெங்கத்துார் ஏரியை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என, விவசாயிகள் மற்றும் குடியிருப்பு நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வெங்கத்துார் ஏரி ஆக்கிரமிப்பாளர்களுக்கு, 2022ம் ஆண்டு, படிவம் 7ன் கீழ் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வரும் காலங்களில் படிவம் 6ன் கீழ் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பொதுப்பணித் துறையினருடன் கலந்தாலோசித்து மாற்று இடம் தேர்வு செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அதன்பின் வெங்கத்துார் ஏரி ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.