/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உணவகங்கள் முன் 'பார்க்கிங்' சுங்கச்சாவடியில் விபத்து அபாயம்
/
உணவகங்கள் முன் 'பார்க்கிங்' சுங்கச்சாவடியில் விபத்து அபாயம்
உணவகங்கள் முன் 'பார்க்கிங்' சுங்கச்சாவடியில் விபத்து அபாயம்
உணவகங்கள் முன் 'பார்க்கிங்' சுங்கச்சாவடியில் விபத்து அபாயம்
ADDED : நவ 03, 2025 01:03 AM

திருமழிசை: திருமழிசை அருகே கோலப்பஞ்சேரி சுங்கச்சாவடி பகுதியில் வெளிவட்ட நெடுஞ்சாலையில் உணவகங்களுக்காக நிறுத்தப்படும் வாகனங்களால், மற்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட நெடுஞ் சாலையில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் திருமழிசை அருகே கோலப்பஞ்சேரி சுங்கச் சாவடி பகுதியில் இணைப்பு சாலையில் பல உணவகங்கள் உள்ளன.
இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், இணைப்பு சாலையில் வாகனங்களை நிறுத்தாமல் வெளிவட்ட நெடுஞ்சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி உணவருந்த செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனால், சுங்கச்சாவடி பகுதியிலிருந்து மீஞ்சூர் நோக்கி செல்லும் மற்ற வாகன ஓட்டிகள், சாலையோரம் நிற்கும் கனரக வாகனங்களால் சிரமப்பட்டு வருகின்றனர்.
சில சமயங்களில், சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது, பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்தில் சிக்குகின்றன.
எனவே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார், கோலப்பஞ்சேரி சுங்கச் சாவடி பகுதியில், நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

