/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை ஆக்கிரமிப்புகள் மீண்டும் அகற்றம்
/
சாலை ஆக்கிரமிப்புகள் மீண்டும் அகற்றம்
ADDED : டிச 10, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி அமைந்துள்ள ஜி.என்.டி., சாலையோரம் ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தன. அதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், கடந்த நவம்பர் மாதம், 16ம் தேதி, சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தையும் நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.
மாற்று இடம் கேட்டு வந்த சாலையோர வியாபாரிகள், சில தினங்களாக ஜி.என்.டி., சாலையோர பகுதியை மீண்டும் ஆக்கிரமிக்க துவங்கினர்.
இதையடுத்து, நேற்று மீண்டும், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர். சாலை ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து, கண்காணிக்கப்பட்டு அகற்றப்படும் என, எச்சரித்து சென்றனர்.