/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை சீரமைப்பு பணி ரூ.94 லட்சத்தில் துவக்கம்
/
சாலை சீரமைப்பு பணி ரூ.94 லட்சத்தில் துவக்கம்
ADDED : ஆக 10, 2025 10:23 PM
திருத்தணி:மாம்பாக்கம் - சின்னகடம்பூர் இடையே, 94 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளை, திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் துவக்கி வைத்தார்.
திருத்தணி ஒன்றியம், மாம்பாக்கம் கிராமத்தில் இருந்து சின்னகடம்பூர் வழியாக, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், குருவராஜபேட்டை ஆகிய பகுதிகளுக்கு வேன், லாரி மற்றும் இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன.
இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட தார்ச்சாலை முறையாக பராமரிக்கப்படாததால், குண்டும் குழியுமாக மாறியது.
இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், மாம்பாக்கம் - சின்னகடம்பூர் வரை, 5.5 கி.மீ., சேதமடைந்த தார்ச்சாலையை சீரமைக்க, பிரதமர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 94 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இச்சாலை பணிகளை, திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். அப்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் உட்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.