/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை சீரமைப்பு பணி அரைகுறை கெருக்கம்பேடு பகுதி மக்கள் அவதி
/
சாலை சீரமைப்பு பணி அரைகுறை கெருக்கம்பேடு பகுதி மக்கள் அவதி
சாலை சீரமைப்பு பணி அரைகுறை கெருக்கம்பேடு பகுதி மக்கள் அவதி
சாலை சீரமைப்பு பணி அரைகுறை கெருக்கம்பேடு பகுதி மக்கள் அவதி
ADDED : ஜூலை 25, 2025 01:35 AM

கூவம்:கெருக்கம்பேடு பகுதியில் சாலை சீரமைப்பு பணிகள் அரைகுறையாக விடப்பட்டதால் பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியம் கூவம் ஊராட்சிக்குட்பட்ட கெருக்கம்பேடு கிராமம். 30 குடியிருப்புகள் உள்ள இப்பகுதியில் 200 மீட்டர் நீளம் கொண்ட சாலையில் 100 மீட்டர் நீளத்திற்கு பிப்ரவரி மாதம் ஒன்றிய நிர்வாகம் உத்தரவின் பேரில் 5 லட்சம் ரூபாயில் சிமென்ட் கல் சாலை அமைக்கப்பட்டது.
மீதமுள்ள 100 மீட்டர் நீள சாலை எவ்வித பணிகளும் நடைபெறாமல் கடந்த 5 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தரமின்றி அமைக்கப்பட்ட சிமென்ட் கல் சாலையும் மூன்றே மாதத்தில் ஆங்காங்கே சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மழை நேரங்களில் சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் கூவம் ஊராட்சியில் ஆய்வு செய்து சேதமடைந்த சிமென்ட் கல் சாலையை சீரமைக்கவும் மீதமுள்ள 100 மீட்டர் பகுதியிலும் சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கெருக்கம்பேடு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.