/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஜனப்பன்சத்திரம் - ஊத்துக்கோட்டை பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப்பணி
/
ஜனப்பன்சத்திரம் - ஊத்துக்கோட்டை பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப்பணி
ஜனப்பன்சத்திரம் - ஊத்துக்கோட்டை பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப்பணி
ஜனப்பன்சத்திரம் - ஊத்துக்கோட்டை பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப்பணி
ADDED : ஏப் 04, 2025 02:32 AM

ஊத்துக்கோட்டை:ஜனப்பன்சத்திரம் - ஊத்துக்கோட்டை இடையே, மஞ்சங்காரணை, கன்னிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், ஊத்துக்கோட்டை மற்றும் இணைப்பு சாலை வழியே, 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர், புத்துார், திருப்பதி, கடப்பா, கர்நுால், நந்தியால், ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் மேற்கண்ட சாலை வழியே செல்கின்றன. தினமும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் இச்சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில், 32 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, தார்சாலை அமைக்கும் பணி துவங்கியது. ஜனப்பன்சத்திரம் துவங்கி, பெரியபாளையம் வரை பணி நடந்தது. தொடர்ந்து தாராட்சியில் துவங்கி, பாலவாக்கம் மின்வாரிய அலுவலகம் வரை பணி நடந்தது. தற்போது பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தார்ச்சாலை போடாத இடங்களில் சாலை, கீறி விடப்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாறி செல்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தார்சாலை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

