/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் இறங்கும் பாதை பணிக்கு ரூ.32 கோடி மறுமதிப்பீடு
/
திருத்தணி கோவிலில் இறங்கும் பாதை பணிக்கு ரூ.32 கோடி மறுமதிப்பீடு
திருத்தணி கோவிலில் இறங்கும் பாதை பணிக்கு ரூ.32 கோடி மறுமதிப்பீடு
திருத்தணி கோவிலில் இறங்கும் பாதை பணிக்கு ரூ.32 கோடி மறுமதிப்பீடு
ADDED : ஏப் 04, 2025 10:16 PM
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவர் முருகப் பெருமானை தரிசித்து செல்கின்றனர்.
பெரும்பாலான பக்தர்கள் இருசக்கர வாகனம், ஆட்டோ, கார், வேன், பேருந்து போன்ற வாகனங்களில் முருகன் மலைக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
கோவில் நிர்வாகம் வாகனங்கள் சென்று வருவதற்கு, ஒரேயொரு மலைப்பாதை அமைத்துள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மலைப்பாதையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தவிர்ப்பதற்காக, வாகனங்கள் மலைக்கோவிலில் இருந்து இறங்குவதற்கு, இரு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மண் சாலையை, தார்ச்சாலையாக மாற்றுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன் கோவில் நிர்வாகம், 10.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, தார்ச்சாலை அமைத்து தருமாறு, திருத்தணி நெடுஞ்சாலை துறையினருக்கு பரிந்துரை செய்தது.
தொடர்ந்து, நெடுஞ்சாலை துறையினர் மண்பாதையை ஆய்வு செய்து, நிதி ஒதுக்கீடு போதாது என, கோவில் நிர்வாகத்திடம் கூறி, தரமான தார்ச்சாலை அமைப்பதற்கு, 32.60 கோடி ரூபாய் தேவை என, நெடுஞ்சாலை துறையினர் திட்ட மதிப்பீடு தயார் செய்து, கோவில் நிர்வாகத்திடம் கடந்த மாதம் சமர்ப்பித்தது.
தொடர்ந்து, கோவில் நிர்வாகம் நிதி ஒதுக்கீடை உயர்த்தி கொடுத்தும், தார்ச்சாலை அமைப்பதற்கு நெடுஞ்சாலை துறையினர் கொடுத்த வரைபடம் மற்றும் திட்டமதிப்பீடு குறித்து, கடந்த மார்ச் 24ம் தேதி ஹிந்து அறநிலைய துறை ஆணையருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்து.
ஆணையர் அனுமதி வழங்கியவுடன், கோவில் நிர்வாகம், 32.60 கோடி ரூபாயை நெடுஞ்சாலை துறையிடம் முதலீடு செய்து, ஓராண்டிற்குள் தார்ச்சாலை அமைத்து தரும்படி பரிந்துரை செய்ய உள்ளது.

