/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உர விற்பனையில் முறைகேடு நடந்தால் விற்பனை உரிமம் ரத்து
/
உர விற்பனையில் முறைகேடு நடந்தால் விற்பனை உரிமம் ரத்து
உர விற்பனையில் முறைகேடு நடந்தால் விற்பனை உரிமம் ரத்து
உர விற்பனையில் முறைகேடு நடந்தால் விற்பனை உரிமம் ரத்து
ADDED : நவ 07, 2024 10:19 PM
திருவள்ளூர்:உர விற்பனையில் முறைகேட்டில் ஈடுபட்டால் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என, வேளாண் இணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் ராபி பருவத்திற்கு தேவையான, 48.50 லட்சம் கிலோ யூரியா, 13.26 லட்சம் கிலோ டி.ஏ.பி., 53.80 லட்சம் கிலோ காம்பளக்ஸ் மற்றும் 6.83 லட்சம் கிலோ பொட்டாஷ் ஆகிய உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு உள்ளது.
விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்யாமல் செயற்கையாக உர பற்றாக்குறையை ஏற்படுத்துவது, கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வது மற்றும் ஒரு நபருக்கு அதிக அளவில் உரம் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், விற்பனை உரிமம் ரத்து உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உர விற்பனை நிலையத்தில், விலை பட்டியல் வைக்க வேண்டும். விவசாயிகளுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும். மானிய விலையில் விற்கப்படும் உரங்களை விவசாயிகளுக்கு மட்டுமே ஆதார் அட்டை எண் பெற்று சாகுபடி நிலப்பரப்பு மற்றும் பயிர்களுக்கு ஏற்ப வழங்க வேண்டும்.
விவசாயிகள் அல்லாதோருக்கு உரம் விற்பனை செய்தால், உர கட்டுப்பாட்டு ஆணை 1985ன்படி விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.
இது தொடர்பாக ஏதேனும் புகார் இருந்தால், விவசாயிகள் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.