/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொதட்டூர் மலைக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி
/
பொதட்டூர் மலைக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி
ADDED : அக் 21, 2024 02:20 AM

ஆர்.கே.பேட்டை:பொதட்டூர்பேட்டை நகரின் மேற்கில் அமைந்துள்ளது ஆறுமுக சுவாமி மலைக்கோவில். இந்த மலையின் உச்சியில் ஆறுமுக சுவாமி மற்றும் உச்சிபிள்ளையார் கோவில் அமைந்துள்ளது.
அடிவாரத்திலும், விநாயகர். ஆறுமுக சுவாமி சன்னிதிகள் உள்ளன. காணும் பொங்கல் தினத்தில் கிரிவலம் மற்றும் பரிவேட்டை கொண்டாடப்படுவது உண்டு.
உச்சிபிள்ளையார் கோவிலில் மாதம் தோறும் தேய்பிறை சதுர்த்தியில் சங்கடஹர சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
பொதட்டூர்பேட்டை ஆறுமுக சுவாமி மலைக்கோாவிலில் நேற்று மாலை தேய்பிறை சதுர்த்தியை ஒட்டி சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சுவாமிக்கு, அருகம்புல் மற்றும் மலர் மாலைகள் தொடுத்து அலங்கரித்தனர். விழாவை ஒட்டி, பொதட்டூர்பேட்டையை சேர்ந்த திரளான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்திருந்தனர்.

