/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அதிகாரிகள் சமரசம் பணிக்கு திரும்பிய துாய்மை பணியாளர்கள்
/
அதிகாரிகள் சமரசம் பணிக்கு திரும்பிய துாய்மை பணியாளர்கள்
அதிகாரிகள் சமரசம் பணிக்கு திரும்பிய துாய்மை பணியாளர்கள்
அதிகாரிகள் சமரசம் பணிக்கு திரும்பிய துாய்மை பணியாளர்கள்
ADDED : ஆக 13, 2025 11:19 PM
பொன்னேரி:தடப்பெரும்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட துாய்மை பணியாளர்கள், அதிகாரிகளின் சமசர பேச்சுக்கு பின், பணிக்கு திரும்பினர்.
மீஞ்சூர் ஒன்றியம், தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில், 13 துாய்மை பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் இருவர் நிரந்தர பணியாளர்களாகவும், மற்றவர்கள் தற்காலிக பணியாளர்களாகவும் உள்ளனர்.
தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில், தினமும், 12,000 கிலோ குப்பை கழிவுகள் வெளியேறும் நிலையில் பணிச்சுமை, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது, குறைந்த ஊதியம் குறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதிகாரிகள் அலட்சியப்படுத்துவதாக கூறி, நேற்று முன்தினம் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரண்டாவது நாளாக நேற்று போராட்டத்தை தொடர்ந்த நிலையில், மீஞ்சூர் பி.டி.ஓ., குணசேகரன் தலைமையில் துாய்மை பணியாளர்களிடம் அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.
துாய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். துாய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டன.
இதையடுத்து துாய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்பினர்.