/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடிநீர் தட்டுப்பாடு கடமஞ்சேரியில் தவிப்பு
/
குடிநீர் தட்டுப்பாடு கடமஞ்சேரியில் தவிப்பு
ADDED : ஜன 05, 2024 10:14 PM
பொன்னேரி:மீஞ்சூர் ஒன்றியம், வேலுார் ஊராட்சிக்கு உட்பட்ட கடமஞ்சேரி கிராமத்தில், 100க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. நிலத்தடி நீர் உவர்ப்பு பகுதியாக உள்ள இந்த கிராமத்திற்கு, கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் முற்றிலும் இல்லாததால் கிராமவாசிகள் தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். காசு கொடுத்து குடிநீர் கேன்களை வாங்கி பருகும் நிலைக்கு ஆளாகி உள்ளனர்.
இது குறித்து கிராமவாசிகள் தெரிவித்ததாவது:
கிராமத்தில் ஆழ்துளை கிணறுகள் வாயிலாக கிடைக்கும் தண்ணீர் சமைக்க, குடிக்க பயன்படுத்த முடியாது. மீஞ்சூர் அடுத்த வன்னிப்பாக்கம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வழங்கப்படுகிறது.
அதைதான் பயன்படுத்தி வந்தோம். கடந்த, ஒரு வாரமாக குடிதண்ணீர் கிடைக்காமல் தவிக்கிறோம். கூட்டுகுடிநீர் திட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. இங்கு ஏழை கூலித்தொழிலாளிகள் அதிகம் உள்ளனர்.
தினமும், 30 -35 ரூபாய் கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்துவதால் பெரும் செலவு ஏற்படுகிறது. கிராமத்திற்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.