/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழுதடைந்த குடிநீர் தொட்டியால் பள்ளி மாணவர்களுக்கு விபத்து அபாயம்
/
பழுதடைந்த குடிநீர் தொட்டியால் பள்ளி மாணவர்களுக்கு விபத்து அபாயம்
பழுதடைந்த குடிநீர் தொட்டியால் பள்ளி மாணவர்களுக்கு விபத்து அபாயம்
பழுதடைந்த குடிநீர் தொட்டியால் பள்ளி மாணவர்களுக்கு விபத்து அபாயம்
ADDED : ஜன 15, 2025 11:41 PM

திருவாலங்காடு,
திருவாலங்காடு ஒன்றியம், அரும்பாக்கம் ஊராட்சியில், அரசு துவக்கப் பள்ளி வளாகத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த நீர்த்தேக்க தொட்டி வாயிலாக கிராமத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இரண்டு ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் பயன்பாட்டில் உள்ளது.
கான்கிரீட் பெயர்ந்து தூண்கள் விரிசல் அடைந்து, காணப்படும் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே துவக்கப்பள்ளி உள்ளது.
பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கீழே விளையாடி வருவதாக பெற்றோர் புலம்புகின்றனர்.
இந்நிலையில் விபத்து நிகழும் முன், பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.