/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விதிமீறி டூ - வீலரில் செல்லும் பள்ளி மாணவ - மாணவியர்
/
விதிமீறி டூ - வீலரில் செல்லும் பள்ளி மாணவ - மாணவியர்
விதிமீறி டூ - வீலரில் செல்லும் பள்ளி மாணவ - மாணவியர்
விதிமீறி டூ - வீலரில் செல்லும் பள்ளி மாணவ - மாணவியர்
ADDED : நவ 03, 2025 10:26 PM

கும்மிடிப்பூண்டி:  கும்மிடிப்பூண்டி பகுதியில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு சென்று வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி, 18 வயது வரை டூ - வீலர், கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்ட அனுமதிக்க கூடாது. மீறினால், போக்குவரத்து விதிகளின்படி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
அபராதம், ஆர்.சி., ரத்து, 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற முடியாத நிலை உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள், போக்குவரத்து போலீசார் மூலம் எடுக்கப்படும். மேலும், 18 வயது நிரம்பாதவர்கள் வாகனங்கள் ஓட்டும்போது, அவர்களுக்கு மட்டுமின்றி பிறருக்கும் விபத்து அபாயம் அதிகம் உள்ளது.
இந்நிலையில், கும்மிடிப்பூண்டி பகுதியில், போக்குவரத்து விதிமுறைகள் மீது போதிய விழிப்புணர்வு இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில், இருசக்கர வாகனங்களில் பள்ளிகளுக்கு சென்று வரும் மாணவ - மாணவியரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
போக்குவரத்து துறையினர் மற்றும் போலீசார், பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளிகள் தோறும் சிறப்பு முகாம் நடத்தி, 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகன ஓட்டுவதில் உள்ள விபரீதம் மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

