/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுற்றுச்சுவர் இல்லாத பள்ளி ஆசிரியர்கள் புலம்பல்
/
சுற்றுச்சுவர் இல்லாத பள்ளி ஆசிரியர்கள் புலம்பல்
ADDED : செப் 19, 2024 11:38 PM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், மணவூரில் அரசு துவக்க பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளி, அங்கன்வாடி மையம் ஆகியவை ஒருங்கிணைந்த வளாகத்தில் இயங்கி வருகிறது.
இந்த வளாகத்தை சுற்றி அமைக்கப்பட்ட சுற்றுச்சுவர், 2017ல் புதிய கட்டடம் கட்டுவதற்காக உடைக்கப்பட்டது. கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை.
இதனால், பள்ளி மாணவர்கள் குட்டை பகுதியில் ஆபத்தான முறையில் விளையாடுவதுடன், வெளியாட்கள் நடமாட்டம் உள்ளதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர். இதனால், மாணவர்களை கட்டுப்படுத்த மற்றும் பாதுகாக்க சிரமமாக உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.