/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேருந்து நிலைய வாயிலில் கழிவுநீர் திருமழிசை பயணியர் அவதி
/
பேருந்து நிலைய வாயிலில் கழிவுநீர் திருமழிசை பயணியர் அவதி
பேருந்து நிலைய வாயிலில் கழிவுநீர் திருமழிசை பயணியர் அவதி
பேருந்து நிலைய வாயிலில் கழிவுநீர் திருமழிசை பயணியர் அவதி
ADDED : செப் 22, 2024 01:35 AM

திருவள்ளூர்,:வெள்ளவேடு அடுத்துள்ளது திருமழிசை. இங்குள்ள பேருந்து நிலைய பகுதியில் கழிவுநீர் கால்வாய் முறையாக இல்லாததால், இந்த பேருந்து நிலைய நுழைவு வாயில் பகுதியில் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து குளம் போல் நிற்கிறது.
இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணியர் மற்றும் பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் ஏற்படும் துர்நாற்றத்தால் திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிலையம் வழியே வாகனங்களில் செல்வார் மற்றும் இவ்வழியே அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு செல்லும் பகுதிவாசிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் பேரூராட்சி பகுதியில் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் மற்றும் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.