/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் ஓடும் கழிவுநீர் வாகன ஓட்டிகள் அவதி
/
சாலையில் ஓடும் கழிவுநீர் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : நவ 05, 2024 11:07 PM

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை நகரில் இருந்து அத்திமாஞ்சேரிபேட்டை செல்லும் சாலையில் மேல்பொதட்டூர் அருகே, அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவில் அருகே சாலையில் கழிவநீர் பாய்கிறது. கழிவுநீர் கால்வாய் அக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஓராண்டு காலமாக சாலையில் கழிவுநீர் பாய்ந்து வந்தது.
இதனால் இந்த பகுதியில் தார்சாலை சேதம் அடைந்து கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. சாலையும் குண்டும் குழியமாக கிடக்கிறது. இதனால், வாகனஓட்டிகள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சாலையின் ஒரு பகுதியில் யாரும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பில் துார்ந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாயை சீரமைத்து, முறையாக கழிவநீர் வெளியேற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

