/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சனி பிரதோஷ விழா கோவில்களில் விமரிசை
/
சனி பிரதோஷ விழா கோவில்களில் விமரிசை
ADDED : மே 10, 2025 08:39 PM
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த பஞ்செட்டியில், ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. பிரதோஷ மகிமை கொண்ட பெருமை வாய்ந்த சிவத்தலங்களுள் பஞ்செட்டியும் ஒன்று. சனி பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று, பஞ்செட்டி கோவிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
அதேபோல, கவரைப்பேட்டை அடுத்த அரியதுறை வரமூர்த்தீஸ்வரர், புதுகும்மிடிப்பூண்டி பாலீஸ்வரர், கும்மிடிப்பூண்டி வில்வநாதீஸ்வரர், முக்கோட்டிஸ்வரர், தேர்வழி தான்தோன்றீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில், சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
ஆர்.கே.பேட்டை
ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தில் உள்ள பஞ்சாட்சரமலை உச்சியில் மரகதேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். சித்திரை வளர்பிறையான நேற்று மாலை மரகதேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு நடத்தப்பட்டது.
அதேபோல், பொதட்டூர்பேட்டை அடுத்த ஸ்ரீகாவேரிராஜபேட்டை ஜம்புலிங்கேஸ்வரர் கோவில், அத்திமாஞ்சேரிபேட்டை கல்யாண சுந்தரேசனார், வங்கனுார் வியாசேஸ்வரர் கோவில்களிலும் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.