/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மக்காசோளத்தில் நிலையான வருவாய் கிடைக்கும் எஸ்.எல்.பி., எத்தனால் நிறுவனம் உறுதி
/
மக்காசோளத்தில் நிலையான வருவாய் கிடைக்கும் எஸ்.எல்.பி., எத்தனால் நிறுவனம் உறுதி
மக்காசோளத்தில் நிலையான வருவாய் கிடைக்கும் எஸ்.எல்.பி., எத்தனால் நிறுவனம் உறுதி
மக்காசோளத்தில் நிலையான வருவாய் கிடைக்கும் எஸ்.எல்.பி., எத்தனால் நிறுவனம் உறுதி
ADDED : அக் 31, 2025 01:05 AM

கும்மிடிப்பூண்டி:  'மக்களாச்சோளம் பயிரிடுவதன் வாயிலாக, விவசாயிகள் நிலையான வருவாய் ஈட்ட முடியும்' என, விதைப்பை வழங்கும் நிகழ்ச்சியில், விவசாயிகளிடம், எஸ்.எல்.பி., நிறுவனம் உறுதியளித்தது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே, தேர்வாய்கண்டிகை சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் எஸ்.எல்.பி., எத்தனால் தொழிற்சாலையின் உற்பத்திக்கு தேவையான மக்காச்சோளம், அதிக அளவில் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படுகிறது.
மக்காசோளத்திற்கான தேவை அதிகம் உள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் நிலையான வருவாயை ஈட்டும் பொருட்டு, அவர்கள் மக்காச்சோளம் பயிரிடுவதை மாவட்ட வேளாண் துறை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், எஸ்.எல்.பி., நிறுவனமும் அவ்வப்போது மக்காச்சோளம் பயிரிடுவதற்கான விதை மற்றும் இடுபொருட்களை வழங்கி வருகிறது.
நேற்று கும்மிடிப்பூண்டி இயற்கை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சார்ந்த, 40 விவசாயிகளுக்கு மக்காச்சோளம் பயிரிடுவதற்கான, 260 கிலோ விதைப்பை வழங்கும் விழா எஸ்.எல்.பி., நிறுவன வளாகத்தில் நடந்தது.
விழாவில், கும்மிடிப்பூண்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் டில்லிகுமார், இயற்கை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் சுதாகர் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
நிறுவனத்தின் பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன், விவசாயிகளுக்கு மக்காளச்சோள விதைப்பைகளை வழங்கினார். உதவி மேலாளர் முருகானந்தம் உடனிருந்தார்.
விவசாயிகளிடம், மக்காளச்சோளம் பயிரிடுவதால், நிலையான வருவாய் கிடைக்கும் எனவும், இடைதரகர்கள் இன்றி, எஸ்.எல்.பி., நிறுவனமே நேரிடையாக பெற்றுகொள்ளும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.

