/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.10,000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., கைது
/
ரூ.10,000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., கைது
ADDED : அக் 31, 2025 01:06 AM

ஊத்துக்கோட்டை:  விபத்து வழக்கில், லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., உட்பட இருவரை, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஊத்துக்கோட்டை அடுத்த, தாராட்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார். கடந்த மாதம், 14ம் தேதி தொம்பரம்பேடு பகுதியில் காரில் சென்றார்.
அப்போது எதிரே வந்த பைக்கில் மோதிய விபத்தில், அஜித்குமார் உட்பட மூன்று பேர் காயம் அடைந்தனர்.
ஊத்துக்கோட்டை போலீசார் காரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
விபத்து ஏற்படுத்திய காரை திருவள்ளூர் ஆர்.டி.ஓ., அலுவலகம் கொண்டு செல்ல, 10,000 ரூபாய் லஞ்சம் வேண்டுமென, எஸ்.எஸ்.ஐ., பாஸ்கர் கேட்டுள்ளார்.
இதுகுறித்து அஜித்குமார் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரை படி, நேற்று மதியம், அஜித்குமார் எஸ்.எஸ்.ஐ., பாஸ்கரை தொடர்பு கொண்டதற்கு, ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் உள்ள டேட்டா என்ட்ரீ ஆப்ரேட்டர் சுகுமாரிடம் பணம் கொடுக்குமாறு கூறியுள்ளார்.
அஜித்குமார் பணம் கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கணேசன் தலைமையிலான போலீசார் சுகுமாரை கையும், களவுமாக பிடித்தனர்.
எஸ்.எஸ்.ஐ., பாஸ்கரும் கைது செய்யப்பட்டார். இருவரையும் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

