/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் உருவான சிறு சிறு குளங்கள் தினமும் '8' போடும் வாகன ஓட்டிகள்
/
சாலையில் உருவான சிறு சிறு குளங்கள் தினமும் '8' போடும் வாகன ஓட்டிகள்
சாலையில் உருவான சிறு சிறு குளங்கள் தினமும் '8' போடும் வாகன ஓட்டிகள்
சாலையில் உருவான சிறு சிறு குளங்கள் தினமும் '8' போடும் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 11, 2024 03:11 AM

மீஞ்சூர்:மீஞ்சூர் - மணலி மாநில நெடுஞ்சாலையில் உள்ள புங்கம்பேடு கிராமத்தில் இருந்து நந்தியம்பாக்கம் செல்லும் சாலை சேதமடைந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
மேலும், சாலை முழுதும் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு, அதில், தற்போது மழைநீர் சிறு சிறு குட்டைகளாக தேங்கி உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை பள்ளங்களில் வளைந்து வளைந்து பயணிக்கின்றனர்.
கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் பள்ளங்களில் சிக்கி தவிக்கின்றன. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைந்து, விபத்துக்களில் சிக்கி வருகின்றனர்.
புங்கம்பேடு, பட்டமந்திரி, மேலுார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தோர், நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் சென்று வரும் போதும், கொள்ளட்டீ, தமிழ்கொரஞ்சூர், மவுத்தம்பேடு உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மீஞ்சூர் வந்து செல்லும் கிராமவாசிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
ஐந்து ஆண்டுகளுக்கம் மேலாக இச்சாலை சீரமைக்கப்படாமல் இருப்பது கிராமவாசிகள், ரயில் பயணியர், வாகன ஓட்டிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, சாலையை புதுப்பிக்க மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.