/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மெதுாரில் சோலார் மின்விளக்குகள் தனியார் பங்களிப்புடன் பொருத்தம்
/
மெதுாரில் சோலார் மின்விளக்குகள் தனியார் பங்களிப்புடன் பொருத்தம்
மெதுாரில் சோலார் மின்விளக்குகள் தனியார் பங்களிப்புடன் பொருத்தம்
மெதுாரில் சோலார் மின்விளக்குகள் தனியார் பங்களிப்புடன் பொருத்தம்
ADDED : டிச 17, 2024 09:57 PM
பொன்னேரி:பொன்னேரி அடுத்த, மெதுார் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில், 'கேன் பின் ஹோம்ஸ் லிமிடெட்', திருப்பூர் கிளை சார்பில், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான சோலார் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.
மெதுார், மெதுார் காலனி, முல்லை நகர், அச்சரப்பளம், மெதுார் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில், உயர்கோபுர சோலார் விளக்குகளும், ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில், 25 இடங்களில் கம்பங்கள் பதித்து சோலார் மின்விளக்குகளும் பொருத்தப்பட்டன.
இவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி, நேற்று, ஊராட்சி தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது.
இதில், 'கேன் பின் ஹோம்ஸ் லிமிடெட்', தமிழ்நாடு மண்டல தலைவர் அழகிரி, திருப்பூர் கிளை மேலாளர் சிரஞ்சீவி முனிவேலு ஆகியோர் பங்கேற்று, சோலார் விளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் தலைவர் கலைச்செல்வி, ஊராட்சி செயலர் தரணி உள்ளிட்டோர் உடனடிருந்தனர்.