/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஐ.ஐ.டி.,யில் தென்மாநில வாலிபால் எஸ்.ஆர்.எம்., - எஸ்.டி.சி., 'சாம்பியன்'

ADDED : மார் 12, 2024 09:37 PM

சென்னை:கிண்டியில் உள்ள சென்னை ஐ.ஐ.டி., எனும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ் சார்பில், தென்மாநில அளவில் விளையாட்டு போட்டிகள், கடந்த 7ல் துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
ஆடவரில் எட்டு அணிகள் 'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறையிலும், பெண்களில் ஐந்து அணிகள் 'லீக்' முறையிலும் விளையாடின.
ஆண்களுக்கான இறுதிப் போட்டியில், பொள்ளாச்சி எஸ்.டி.சி., மற்றும் திருச்சி ஜமால் அணிகள் எதிர்கொண்டன. அதில், 25 - 18, 25 - 21, 25 - 20 என்ற கணக்கில் எஸ்.டி.சி., அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது.
மூன்றாம் இடத்திற்கான போட்டியில், சென்னை சத்யபாமா அணி, 25 - 22, 25 - 18 என்ற கணக்கில் பனிமலர் அணியை வீழ்த்தி கைப்பற்றியது.
பெண்களுகான அனைத்து 'லீக்' ஆட்டங்களின் முடிவில், எஸ்.ஆர்.எம்., - ஜேப்பியார் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன.
விறுவிறுப்பான இப்போட்டியில், எஸ்.ஆர்.எம்., அணி, 25 - 20, 25 - 19, 25 - 16 என்ற கணக்கில் ஜேப்பியார் அணியை தோற்கடித்து, சாம்பியன் கோப்பையை பெற்றது.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, தமிழ்நாடு வாலிபால் சங்கத்தின் வாழ்நாள் தலைவர் அர்ஜுன்துரை பரிசுத்தொகைகளை வழங்கினார்.