/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விளையாட்டு 501 மாணவ - மாணவியர் சிலம்பம் சுற்றி உலக சாதனை
/
விளையாட்டு 501 மாணவ - மாணவியர் சிலம்பம் சுற்றி உலக சாதனை
விளையாட்டு 501 மாணவ - மாணவியர் சிலம்பம் சுற்றி உலக சாதனை
விளையாட்டு 501 மாணவ - மாணவியர் சிலம்பம் சுற்றி உலக சாதனை
ADDED : ஏப் 01, 2025 12:43 AM
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் பி.கே.முத்துராமலிங்கம் சிலம்ப கலைக்கூடம் மற்றும் பொன்னேரியில் இயங்கி வரும் ஜி.ராமமூர்த்தி சிலம்ப கலைக்கூடம் சார்பில், சிலம்பாட்டத்தில் உலக சாதனை நிகழ்வு நடந்தது.
கவரைப்பேட்டை அடுத்த பெருவாயல் பகுதியில் உள்ள டி.ஜெ.எஸ்., கல்வி குழும வளாகத்தில் நடந்த நிகழ்வில், கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் தலைமை வகித்தார். சிலம்ப பயிற்சியாளர்கள் கண்ணன், முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், 501 மாணவ - மாணவியர், தேசிய கொடியின் வர்ணம் கொண்ட எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்ட சிலம்பத்தை, தொடர்ந்து ஒரு மணி நேரம் சுற்றி சாதனை படைத்தனர். இவர்களது சாதனை நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் உலக சாதனைக்கான சான்றுகள் வழங்கப்பட்டன.