/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கழிவுநீரை வெளியேற்றினால் அபராதம் தொழிற்சாலைகளுக்கு கடும் எச்சரிக்கை
/
கழிவுநீரை வெளியேற்றினால் அபராதம் தொழிற்சாலைகளுக்கு கடும் எச்சரிக்கை
கழிவுநீரை வெளியேற்றினால் அபராதம் தொழிற்சாலைகளுக்கு கடும் எச்சரிக்கை
கழிவுநீரை வெளியேற்றினால் அபராதம் தொழிற்சாலைகளுக்கு கடும் எச்சரிக்கை
ADDED : நவ 23, 2025 03:16 AM
கும்மிடிப்பூண்டி: 'ஒரு சொட்டு கழிவுநீரை வெளியேற்றினாலும் அபராதம் விதிக்கப்படும்' என, தொழிற்சாலைகளுக்கு சிப்காட் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 220 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அனைத்து தொழிற்சாலைகளும், வளாகத்திற்குள் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய வேண்டும். அப்படி சுத்திகரிப்பு செய்த நீரை மீண்டும் தொழிற்சாலை பயன்பாட்டிற்கும், பசுமை வளையத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பது விதிமுறை.
ஆனால் விதிமீறி, சிப்காட் வளாக மழைநீர் கால்வாயில் திறந்து விடப்பட்டு வருகிறது. அது நேராக, கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியில் கலந்து, நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், தொழிற்சாலைகளின் கழிவுநீரை தடுக்கும் வகையில், தாமரை ஏரிக்கான வரத்து கால்வாயை நீர்வளத்துறையினர் அடைத்தனர். இதனால், தொழிற்சாலைகளின் கழிவுநீர் வடிந்து செல்ல வழியின்றி, தேசிய நெடுஞ்சாலையிலும், அதை ஒட்டிய தொழிற்சாலைகளிலும் தேங்கியுள்ளது.
நேற்று சிப்காட் நிர்வாக அலுவலகத்தில், தொழிற்சாலை நிர்வாகத்தினரை அழைத்து அவசர கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, 'அந்தந்த தொழிற்சாலை வளாகத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும்.
'அத்துமீறி ஒரு சொட்டு கழிவுநீரை வெளியேற்றினாலோ, டேங்கர் லாரி மூலமாக அப்புறப்படுத்தினாலோ அபராதம் விதிக்கப்படும்' என, சிப்காட் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன் மீதான சுற்றறிக்கை, அனைத்து தொழிற்சாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

