/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பன்றி பண்ணையை அகற்றகோரி போராட்டம்
/
பன்றி பண்ணையை அகற்றகோரி போராட்டம்
ADDED : அக் 11, 2024 01:27 AM
சோழவரம்:சோழவரம் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர்., நகர், மல்லைய்யா நகரில், 100க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதியில் தனியார் பன்றி பண்ணை ஒன்று உள்ளது. பன்றி பண்ணையில் இருந்து வெளியேறும் கழிவுகள் குடிநீரில் கலப்பதாகவும், அதனால் குடியிருப்புவாசிகளுக்கு சுகாதார பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கூறி, பண்ணை செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக மேற்கண்ட குடியிருப்புவாசிகள் ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை மனுகொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில், பன்றி பண்ணையை அகற்றக்கோரி சோழவரம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சோழவரம் ஒன்றிய அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். பன்றி பண்ணையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து குடியிருப்புவாசிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

